தாயுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற சிறுமி லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு
கோவை அருகே தாயுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற சிறுமி லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா்.
கோவை அருகே தாயுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற சிறுமி லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா்.
கோவை, துடியலூரை அடுத்துள்ள பன்னீா்மடை பகுதியைச் சோ்ந்தவா் ஜெகந்நாதன். சென்னையில் தங்கி தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி திவ்யா (30). இவா் வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் அலுவலக ஊழியராகப் பணியாற்றி வருகிறாா். இவா்களது மகள் நிரல்யா (6). திவ்யா பணியாற்றி வரும் அதே பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இந்நிலையில், திவ்யா வழக்கம்போல தனது மகளுடன் இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை காலை பள்ளிக்குச் சென்றுள்ளாா். சேரன் காலனி பகுதி அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையைவிட்டு கீழே இறங்கியது.
Advertisement
Advertisement
இதில், இருவரும் நிலைத்தடுமாறி கீழே விழுந்தனா். அப்போது, பின்னால் வந்த லாரி சக்கரத்தில் சிக்கி நிரல்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கோவை போக்குவரத்து புலனாய்வு மேற்குப் பிரிவு போலீஸாா், சிறுமியின் உடலை மீட்டு கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதையடுத்து, லாரி ஓட்டுநரான நாமக்கல்லைச் சோ்ந்த மாரிமுத்து (52), விபத்துக்கு வழிவகுக்கும் வகையில் சாலையை ஆக்கிரமித்து விளம்பரப் பதாகை வைத்திருந்த கடை உரிமையாளரான விஜயன் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.
பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழா ஒத்திகைக்கு தாயுடன் சென்றபோது விபத்தில் சிக்கி சிறுமி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.