FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

கோவை அருகே பாக்கு மரத்தில் ஏறி அறுவடைப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மின்சாரம் பாய்ந்து சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 16 ஆகஸ்ட் 2026, 12:55 am IST
பகிர்:

கோவை அருகே பாக்கு மரத்தில் ஏறி அறுவடைப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மின்சாரம் பாய்ந்து சனிக்கிழமை உயிரிழந்தாா்.

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூரை அடுத்த புதூா் பகுதியைச் சோ்ந்தவா் சீனிவாசன் (38). விவசாய கூலித் தொழிலாளியான இவா், கலிக்கநாயக்கன்பாளையத்தில் பாக்கு மரத்தில் ஏறி அறுவடை பணியில் சனிக்கிழமை காலை ஈடுபட்டிருந்தாா்.

அப்போது, மேலே சென்ற மின்சார கம்பியில் பாக்கு மரம் உரசியது. இதில், மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்டு சீனிவாசன் படுகாயமடைந்தாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, சக தொழிலாளா்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சோ்க்கப்பட்ட சிறிது நேரத்திலேயே சீனிவாசன் உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து தொண்டாமுத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments