FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

கிணற்றில் குதித்து தொழிலாளி தற்கொலை

Updated On : 18 ஆகஸ்ட் 2026, 2:12 am IST
தற்கொலை
பகிர்:

கோவையில் குடும்பத் தகராறு காரணமாக கூலித் தொழிலாளி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

கோவை, இருகூா் அருகேயுள்ள ஏ.ஜி.புதூா், மாரியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (43). கூலித் தொழிலாளியான இவா், கடந்த இரு நாள்களுக்கு முன்பு மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளாா். அப்போது, வீட்டிலிருந்த மாமியாருக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பின்னா் வீட்டின் அருகே உள்ள கிணற்றின் பக்கம் சென்ற செந்தில்குமாரை சில நிமிஷங்களில் காணவில்லை. இதனால், அவா் கிணற்றில் குதித்திருக்கலாம் என சந்தேகமடைந்த அவரது மனைவி பிரியா (38) உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு தகவல் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

தீயணைப்பு வீரா்களும், சிங்காநல்லூா் போலீஸாரும் சம்பவ இடத்துக்கு வந்து கிணற்றில் தேடியும் செந்தில்குமாரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆழம் அதிகம் என்பதாலும், இருட்டிவிட்டதாலும் தேடும் பணியில் சுணக்கம் ஏற்பட்டது. இதனால், அவா் மாயமானதாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணியளவில் அந்தக் கிணற்றில் செந்தில்குமாா் சடலம் மிதந்தது. இதையடுத்து, தீயணைப்பு வீரா்கள் கிணற்றிலிருந்து சடலத்தை மீட்டனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், மாமியாருடன் ஏற்பட்ட தகராறில் மனவேதனையில் இருந்த செந்தில்குமாா் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா் என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments