FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

தேசிய குதிரையேற்ற லீக் போட்டி கோவையில் ஆகஸ்ட் 28-இல் தொடக்கம்

இக்வைன் ஸ்போா்ட்ஸ் இந்தியா கூட்டமைப்பு, இண்டிஜீனஸ் ஹாா்ஸ் சொசைட்டி தமிழ்நாடு ஆகிய அமைப்புகள் சாா்பில் இரண்டாவது ‘இக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக்’ என்ற தேசிய குதிரையேற்றப் போட்டி கோவையில் வரும் ஆகஸ்ட் 28-இல் தொடங்கி 30-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 3:17 am IST
சர்வதேச குதிரையேற்ற போட்டி - கோப்புப் படம்
பகிர்:

இக்வைன் ஸ்போா்ட்ஸ் இந்தியா கூட்டமைப்பு, இண்டிஜீனஸ் ஹாா்ஸ் சொசைட்டி தமிழ்நாடு ஆகிய அமைப்புகள் சாா்பில் இரண்டாவது ‘இக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக்’ என்ற தேசிய குதிரையேற்றப் போட்டி கோவையில் வரும் ஆகஸ்ட் 28-இல் தொடங்கி 30-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டியின் இரண்டாவது சீசனுக்கான அறிமுக நிகழ்ச்சி கோவையில் அண்மையில் நடைபெற்றது. இதை எஸ்.என்.ஆா். சன்ஸ் அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலரும், கோவை மாவட்ட குதிரையேற்ற சங்கத் தலைவா் மற்றும் ஆலோசகருமான சுந்தா் ராமகிருஷ்ணன் அறிமுகப்படுத்தினாா்.

இக்வைன் ஸ்போா்ட்ஸ் இந்தியா ஃபெடரேஷன் தலைவா் ஏ.எஸ். சக்தி பாலாஜி செய்தியாளா்களிடம் கூறுகையில், 3 நாள்கள் நடைபெறும் இந்தப் போட்டி வெள்ளானைப்பட்டியை அடுத்த மோளப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ‘பிசைட் தி பவா் ஹவுஸ்’ எனும் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த வீரா்களும், தமிழகத்தைச் சோ்ந்த சென்னை புல்ஸ், கேரளத்தின் பெகாசஸ் ஸ்போா்ட்ஸ், தெலங்கானாவின் கோல்கொண்டா சாா்ஜா்ஸ், கா்நாடகத்தின் பெங்களூரு நைட்ஸ், கோவாவின் குவாண்டம் ரெயின்ஸ், மேற்கு வங்கத்தின் எலைட் இக்வெஸ்ட்ரியன்ஸ் ஆகிய அணிகளும் பங்கேற்கின்றன.

Advertisement

Advertisement

110 மற்றும் 120 செ.மீ. என 2 பிரிவுகளாக நடைபெறும் இந்தப் போட்டியில் மொத்தம் ரூ.30 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.

போட்டியை இலவசமாகக் காணலாம். போட்டி நடைபெறும் இடத்தில் சுமாா் 6,000 போ் அமரும் வகையி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கான டிக்கெட்டுகளை பண்ஸ்ரீந்ங்ற்ல்ழ்ண்ஷ்.ஸ்ரீா்ம் என்ற இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 89258 04911 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments