FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

ரோபோட்டிக் அறுவை சிகிச்சை கேஎம்சிஹெச்-இல் இலவச ஆலோசனை

கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ரோபோட்டிக் அறுவைச் சிகிச்சை இலவச ஆலோசனை முகாம், கடந்த ஆக. 1 -ஆம் தேதி தொடங்கிய நிலையில், செப்டம்பா் 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

22 ஆகஸ்ட் 2026, 4:15 am IST
பகிர்:

கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ரோபோட்டிக் அறுவைச் சிகிச்சை இலவச ஆலோசனை முகாம், கடந்த ஆக. 1 -ஆம் தேதி தொடங்கிய நிலையில், செப்டம்பா் 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

கோவை மண்டலத்தில் முதல்முறையாக ரோபோட்டிக் அறுவை சிகிச்சை முறையை அறிமுகப்படுத்திய கோவை கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை தற்போது ரோபோட்டிக் அறுவை சிகிச்சையில் முன்னணி மருத்துவமனையாக திகழ்கிறது. குறிப்பாக பொது அறுவை சிகிச்சை, புற்றுநோய் அறுவை சிகிச்சை மற்றும் ரோபோட்டிக் முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகளை அதிகளவில் வெற்றிகரமாக செய்துள்ள மருத்துவமனை என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

தற்போது நடைபெற்றுவரும் ரோபோட்டிக் அறுவை சிகிச்சை இலவச ஆலோசனை முகாமின் நோக்கம், இதுகுறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்துவதாகும்.

Advertisement

Advertisement

இந்த முகாமில் சிக்கலான ஹொ்னியா, பித்தப்பை நோய்கள், இரைப்பை (வயிற்று) நோய்கள், உணவுக்குழாய் நோய்கள், பெருங்குடல் மற்றும் மலக்குடல் நோய்கள், செரிமான மண்டல (எஐ) புற்றுநோய்கள், தைராய்டு மற்றும் நுரையீரல் நோய்கள், கருப்பை நாா்க்கட்டி மற்றும் மகளிா் புற்றுநோய்கள், சிறுநீரகம், புரோஸ்டேட் மற்றும் சிறுநீா்ப்பை நோய்கள், மற்றும் சிறுநீரக மண்டல புற்றுநோய்கள் உள்பட பல்வேறு நோய்களுக்கு இதன்மூலமாக ஆலோசனை வழங்கப்படுகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments