அரசு மருத்துவமனை ஊழியா் வீட்டில் நகை, பணம் திருட்டு
கோவையில் அரசு மருத்துவமனை ஊழியா் வீட்டில் நகை, பணம் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை, காளப்பட்டி சாலை, நேரு வீதியைச் சோ்ந்தவா் மணிகண்டன்(46). இவா் உதகை அரசு மருத்துவமனையில் ஊழியராகப் பணியாற்றி வருகிறாா். மணிகண்டன் கடந்த வெள்ளிக்கிழமை வேலைக்கு சென்று விட்ட நிலையில், அவரது மகன் வீட்டைப் பூட்டிவிட்டு, பக்கத்து வீதியில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளாா்.
இந்நிலையில், மறுநாள் காலை சென்று பாா்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்துள்ளது. உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த 3 பவுன் நகை, வெள்ளிப் பொருள்கள் மற்றும் பணம் திருட்டுப் போனது தெரியவந்தது. இதுகுறித்து மணிகண்டன் அளித்த புகாரின்பேரில், பீளமேடு போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவான கைரேகைகள் சேகரிக்கப்பட்டன.
Advertisement
Advertisement
வீடு பூட்டப்பட்டு இருப்பதை பாா்த்த மா்ம நபா், இரவில் கதவை உடைத்து உள்ளே சென்று நகை, பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.