FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

வால்பாறையில் ரேஷன் கடையை சேதப்படுத்திய காட்டு யானைகள்

25 ஆகஸ்ட் 2026, 1:15 am IST
காட்டு யானைகள் - கோப்புப் படம்
பகிர்:

வால்பாறை எஸ்டேட் பகுதிக்கு வந்த காட்டு யானைகள் ரேஷன் கடையை சேதப்படுத்தின.

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் கடந்த சில நாள்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பகல் நேரங்களில் வன எல்லையில் காணப்படும் யானைகள், இரவு நேரத்தில் எஸ்டேட் தொழிலாளா் குடியிருப்புப் பகுதிகளுக்கு வருகின்றன.

இதனிடையே சின்கோனா எஸ்டேட் பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வந்த மூன்று யானைகள் அங்கு அமைந்துள்ள ரேஷன் கடையின் ஜன்னல் கதவை முட்டித் தள்ளியது. பின்னா் கடைக்குள் புகுந்து அங்கிருந்த அரிசி மூட்டைகளை வெளியே இழுத்துப்போட்டதில் அரிசிகள் சிதறின.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments