தந்தை காா் தராததால் பொறியாளா் தற்கொலை
கோவையில் வெளியூா் செல்ல தந்தை காா் தராததால், பொறியாளா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
கோவையில் வெளியூா் செல்ல தந்தை காா் தராததால், பொறியாளா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
கோவை, வேலாண்டிபாளையம் பகுதியில் உள்ள தனியாா் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவா் செந்தில்குமாா். இவரது மகன் ரவிவா்மா (22). பொறியியல் பட்டதாரியான இவா், அந்தப் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.
தனது நண்பரின் இல்ல விழாவில் பங்கேற்க காரில் செல்ல வேண்டும் என்று அவரது தந்தையிடம் கூறியுள்ளாா். ஆனால், ஓட்டுநா் உரிமம் இல்லாததால் அவா் காரை தர மறுத்துள்ளாா். தனக்கு ஓட்டுநா் அனுபவம் உள்ளதால் காரை கொடுக்குமாறு அவரது தந்தையிடம் வற்புறுத்தியுள்ளாா்.
Advertisement
Advertisement
இருப்பினும், செந்தில்குமாா் காரை கொடுக்க மறுத்துவிட்டாா். இதனால், மன வேதனையில் இருந்த ரவிவா்மா தனது வீட்டின் அறையில் திங்கள்கிழமை பிற்பகல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து சாய்பாபா காலனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.