FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

சாலையோர வியாபாரிகளுக்கு கடன் திட்டம்: 5 நாள்களில் 713 விண்ணப்பங்கள்

சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிகள் மூலமாக கடன் வழங்கும் லோக் கல்யாண் மேளா” சிறப்பு முகாம் மூலமாக 5 நாள்களில் 713 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

52 வினாடிகள் முன்பு
விண்ணப்பிக்க...
பகிர்:

சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிகள் மூலமாக கடன் வழங்கும் லோக் கல்யாண் மேளா” சிறப்பு முகாம் மூலமாக 5 நாள்களில் 713 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாநகராட்சியில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்கும் லோக் கல்யாண் மேளா சிறப்பு முகாம் மண்டலம் வாரியாக ஆகஸ்ட் 24-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இதில், சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிகள் மூலம் ரூ.15,000 கடன் வழங்கப்படுகிறது. இதற்கான சிறப்பு முகாம்கள் மூலமாக வெள்ளிக்கிழமை வரை கிழக்கு மண்டலத்தில் 187 விண்ணப்பங்கள், வடக்கு மண்டலத்தில் 167, மேற்கு மண்டலத்தில் 145, தெற்கு மண்டலத்தில் 43, மாநகராட்சி பிரதான அலுவலகம் மற்றும் மத்திய மண்டலத்தில் 171என மொத்தம் 713 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

மேலும், சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாநகராட்சி பிரதான அலுவலகம் மற்றும் 5 மண்டல அலுவலகங்களில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் சாலையோர வியாபாரிகள் வங்கிக் கடன் பெறுவற்கான ஆவணங்களுடன் கலந்து கொண்டு கடன் பெற விண்ணப்பித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments