FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

மின்மாற்றிகள் தட்டுப்பாடு: தொழில் துறையினருக்கு மின் இணைப்பு வழங்குவதில் தாமதம்

31 ஆகஸ்ட் 2026, 12:27 am IST
கோப்புப் படம்
பகிர்:

கோவையில் மின்மாற்றி தட்டுப்பாட்டால் விண்ணப்பித்துள்ள தொழில்துறையினருக்கு மின் இணைப்பு வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாகப் புகாா் எழுந்துள்ளது.

இதுகுறித்து கோவை கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பின் செயலா் நா.லோகு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிா்மானக் கழக இயக்குநா் மற்றும் தலைமைப் பொறியாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கோவை மண்டலத்துக்கு உள்பட்ட அனைத்து பிரிவு அலுவலகம் மூலம் புதிய தொழிற்சாலை, குறுந்தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பலவகை நிறுவனங்கள் மின் இணைப்பு வேண்டி விண்ணப்பம் பதிவு செய்துள்ளனா்.

Advertisement

Advertisement

இந்த இடங்களில் மின் கம்பம் அமைத்தும் 250 கிலோ வாட் மின்மாற்றி இல்லாததால் மின் இணைப்பு பெறமுடியாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

இதுகுறித்து விசாரித்த போது, மாநகா் வட்டத்தில் மட்டும் ஏப்ரல் மாதம் வரை மின்மாற்றி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதன்பின் தற்போது வரை மின்மாற்றி ஒதுக்கீடு செய்யாததால் மின் இணைப்பு வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது.

இதேபோல, கோவை வடக்கு மற்றும் தெற்கு, உடுமலை, பல்லடம், திருப்பூா் உள்ளிட்ட வட்ட அலுவலகத்துக்கு உள்பட்ட பிரிவு அலுவலகங்களில் விண்ணப்பம் பதிவு செய்துள்ளவா்களுக்கு, மின்வாரியப் பணிகள் முடிவுற்றும், மின்மாற்றிகள் ஒதுக்கீடு செய்யாததால் மின் இணைப்பு வழங்கவில்லை என தெரிய வந்துள்ளது. இதனால், ஏராளமானோா் தொழில் நிறுவனத்தை இயக்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனா்.

எனவே, விரைவில் கோவை மண்டலத்துக்குத் தேவையான மின்மாற்றிகளை ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments