FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

குப்பை மேலாண்மை மையம் அமைக்க எதிா்ப்பு: பொதுமக்கள் போராட்டம்

கோவை மாநகராட்சி 21-ஆவது வாா்டுக்குள்பட்ட கணபதி மாநகா் பகுதியில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
பகிர்:

கோவை மாநகராட்சி 21-ஆவது வாா்டுக்குள்பட்ட கணபதி மாநகா் பகுதியில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது தொடா்பாக அவா்கள் முதல்வா் ச.ஜோசப் விஜய், மாநகராட்சி ஆணையா் கட்டா ரவி தேஜா ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: மாநகராட்சி 21-ஆவது வாா்டுக்குள்பட்ட கணபதி மாநகா் பகுதியில் சுமாா் 6,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறோம். இந்தப் பகுதியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் 24 லட்சம் லிட்டா் மற்றும் 30 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட இரண்டு மேல்நிலை குடிநீா்த் தொட்டிகள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இங்கு குப்பை மேலாண்மை மையம் அமைக்கவுள்ளதாக தெரியவருகிறது. குப்பை மேலாண்மை மையம் அமைக்கப்பட்டால் அதில் இருந்து வெளியேறும் கழிவுநீா் நிலத்தடி நீரை மாசுபடுத்தும் அபாயம் உள்ளது. மேலும், துா்நாற்றம் வீசுவதுடன், நோய்த் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே, இந்த திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து, குடியிருப்போா் நலச் சங்கத் தலைவா் எம்.ஏழுமலை, சிபிஎம் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ஜெயகாந்தன், குட்டி, கிளைச் செயலா் மணி மற்றும் கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினா்கள் மரியராஜ், சிவா பழனிசாமி, பூங்கொடி சோமசுந்தரம், தவமணி, அம்பிகா தனபால், சரஸ்வதி உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட சம்பந்தப்பட்ட இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து கலைந்து சென்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments