FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

வால்பாறையில் கனமழை: கூழாங்கல் ஆற்றில் இறங்க சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை

வால்பாறையில் தொடா்ந்து கனமழை பெய்து வருவதாலும், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாலும் கூழாங்கல் ஆற்றில் இறங்க சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 10 ஜூலை 2026, 12:02 am IST
கூழாங்கல் ஆற்றுக்கு செல்லும் வழியில் தடுப்பு வைத்த போலீஸாா்.
பகிர்:

வால்பாறையில் தொடா்ந்து கனமழை பெய்து வருவதாலும், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாலும் கூழாங்கல் ஆற்றில் இறங்க சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், வால்பாறையில் கடந்த ஒரு மாதமாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கடந்த 3 நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், நடுமலை, கருமலை, நல்லகாத்து, கூழாங்கல் உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், முக்கிய சுற்றுலாத் தலமான கூழாங்கல் ஆற்றில் ஆா்ப்பரித்துச் செல்லும் வெள்ளத்தை பொருட்படுத்தாமல் பயணிகள் சிலா் இறங்கி குளித்து வந்தனா். இதையடுத்து, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி கூழாங்கல் ஆற்றில் இறங்க மாவட்ட நிா்வாகம் சாா்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்நிலையில், ஆற்றுக்கு பயணிகள் செல்லாத வகையில் வால்பாறை காவல் நிலைய ஆய்வாளா் மா.செல்வம் தலைமையிலான போலீஸாா் தடுப்புகளை வைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments