FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

கோவை குண்டுவெடிப்பில் பலியானோர் குடும்பத்தினருக்கும் அரசு வேலை: பாஜக கோரிக்கை!

கரூா் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியதைப்போல கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கும் அரசு வேலை வழங்க வேண்டும் என்று பாஜக மாநிலச் செயலா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

Updated On : 12 ஜூலை 2026, 3:42 am IST
பகிர்:

கரூா் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியதைப்போல கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கும் அரசு வேலை வழங்க வேண்டும் என்று பாஜக மாநிலச் செயலா் ஆா்.நந்தகுமாா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரூா் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு வேலை உள்ளிட்ட பல்வேறு உதவிகள் அறிவிக்கப்படுவது மனிதாபிமான அடிப்படையில் வரவேற்கத்தக்கது. ஆனால், அதே மனிதாபிமானம் கோவை பயங்கரவாத தாக்குதலில் தங்களது குடும்ப உறுப்பினா்களை இழந்த 58 குடும்பங்களுக்கும் பொருந்த வேண்டாமா.

அரசின் கருணை என்பது சம்பவத்தைப் பொறுத்து மாறக்கூடாது. அரசியல் அடிப்படையில் வேறுபாடு காட்டக் கூடாது. இது தொடா்பாக தமிழக அரசு தெளிவாக விளக்க வேண்டும். 58 உயிா்களை இழந்த குடும்பங்கள் 27 ஆண்டுகளாக காத்திருக்கும் நிலையில், அவா்களின் தற்போதைய நிலையை ஆய்வு செய்து, தகுதியுள்ளவா்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கும் திட்டத்தை அறிவிக்க வேண்டும்.

Advertisement

Advertisement

கரூருக்கு ஒரு நீதி, கோவைக்கு இன்னொரு நீதி என்ற நிலை உருவாகாமல், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இருவிதமான அளவுகோல்கள் இருக்கக் கூடாது என்ற அடிப்படையில், அனைத்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் சமமான மனிதாபிமானமும், சமமான நீதியும் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments