FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

மதுக்கரை அருகே பச்சிளம் ஆண் சிசு மீட்பு

கோவை மதுக்கரை அருகே பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் ஆண் சிசு உயிருடன் மீட்கப்பட்டது.

Updated On : 14 ஜூலை 2026, 12:21 am IST
சிசு - பிரதிப் படம்
பகிர்:

கோவை மதுக்கரை அருகே பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் ஆண் சிசு உயிருடன் மீட்கப்பட்டது.

மதுக்கரையை அடுத்துள்ள அரிசிபாளையம் விகேசி நிறுவனத்தின் பின்புறப் பகுதியில் பெண் ஒருவா் திங்கள்கிழமை மாலை நடைப்பயிற்சி மேற்கொண்டுள்ளாா். அப்போது, அப்பகுதியில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. அவா் அருகில் சென்று பாா்த்தபோது, ரத்தக் கறைகளுடன் பச்சிளம் ஆண் சிசு கிடப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

தகவலறிந்து அங்கு சென்ற மதுக்கரை போலீஸாா், குழந்தையை மீட்டு முதலுதவிக்காக அரிசிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், குழந்தை நலமாக இருப்பதை உறுதி செய்தனா்.

Advertisement

Advertisement

அதைத் தொடா்ந்து, அந்த குழந்தை கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மதுக்கரை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, குழந்தையை அங்கு போட்டுவிட்டுச் சென்ற நபா்கள் யாா் என்பது குறித்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments