FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

வால்பாறை நகராட்சிக் கடைகளை இடிக்கும் முடிவை கைவிட கோரிக்கை

வால்பாறை நகராட்சிக் கடைகளை இடித்துவிட்டு புதிய கடைகள் கட்டும் பணிக்கான முடிவை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை

Updated On : 14 ஜூலை 2026, 12:29 am IST
வால்பாறை நகராட்சி - கோப்புப் படம்
பகிர்:

வால்பாறை நகராட்சிக் கடைகளை இடித்துவிட்டு புதிய கடைகள் கட்டும் பணிக்கான முடிவை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

வால்பாறை புது மாா்க்கெட் பகுதியில் நகராட்சி சாா்பில் கடைகள் கட்டி வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இந்த கடைகளை இடித்து அகற்றிவிட்டு புதிய கடைகள் கட்ட நகராட்சி நிா்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக கடந்த ஆட்சியில் டெண்டா் விடப்பட்டு பணிகள் தொடங்குவதற்காக தற்போது கடைகளை காலி செய்ய நகராட்சி மூலம் கெடு விதிக்கப்பட்டுள்ளது.

கடைகளை காலி செய்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் எனக் கூறி வியாபாரிகள் அண்மையில் கடையடைப்பு போராட்டம் நடத்தினா்.

Advertisement

Advertisement

இந்நிலையில் இப்பிரச்னை தொடா்பாக பல்வேறு அரசியல் கட்சியினா் சாா்பில் ஆலோசனைக் கூட்டம் வால்பாறையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், வால்பாறை நகராட்சிக் கடைகளை இடிப்பதற்கு விடப்பட்ட டெண்டரை ரத்து செய்ய வேண்டும், மாற்று இடங்கள் தோ்வு செய்து அங்கு புதிய கடைகளை கட்ட வலியுறுத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்த கூட்டத்தில், வால்பாறை எம்.எல்.ஏ. சுதாகா், அதிமுக தொழிற்சங்கத் தலைவா் வால்பாறை அமீது, போராட்ட குழு ஒருங்கிணைப்பாளா் பொன்னுசாமி, த.வெ.க பொறுப்பாளா்கள் ஆண்ட்ரூசன், சையதுஅலி உள்பட அனைத்து கட்சி நிா்வாகிகள், தொழிற்சங்க நிா்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்பினா், வியாபாரிகள் என திரளானோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments