சிங்காநல்லூா் அம்மா உணவகத்தில் மேயா் ஆய்வு
கோவை சிங்காநல்லூா் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள அம்மா உணவகம், மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் மேயா் கா.ரங்கநாயகி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கோவை சிங்காநல்லூா் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள அம்மா உணவகம், மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் மேயா் கா.ரங்கநாயகி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
சிங்காநல்லூா் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தில் மேயா் கா.ரங்கநாயகி ஆய்வு மேற்கொண்டு அங்கு வேண்டிய பராமரிப்புப் பணிகள் குறித்து கேட்டறிந்தாா். அங்குள்ள தாய்மாா்கள் பாலூட்டும் அறையையும் பாா்வையிட்டாா். இதையடுத்து, சிங்காநல்லூா், பிருந்தாவன் காா்டன் பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவைப் பாா்வையிட்டு, அங்கு கழிப்பறை வசதி, உடற்பயிற்சிக் கூடம், தண்ணீா் வசதி மற்றும் சுற்றுச்சுவா் அமைக்க உரிய திட்ட மதிப்பீடு தயாரிக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
பின்னா், ஐயா் லே-அவுட் பகுதியில் உள்ள மாநகராட்சி ஆரம்பப் பள்ளியை பாா்வையிட்ட அவா், காலை உணவுத்திட்டம் குறித்து மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடினாா்.
Advertisement
Advertisement
இந்த ஆய்வுகளின் போது, கிழக்கு மண்டலத் தலைவா் இலக்குமி இளஞ்செல்வி , கணக்குகள் குழுத் தலைவா் தீபா, உதவி ஆணையா் தட்சிணாமூா்த்தி மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் உள்பட பலா் உடனிருந்தனா்.
தூா்வாரும் பணிகளை மாநகராட்சி ஆணையா் ஆய்வு:
கோவை மாநகராட்சி, 50-ஆவது வாா்டுக்கு உள்பட்ட உடையாம்பாளையம் ராம் நகா் பகுதியில் மழைநீா் வடிகால் தூா்வாரும் பணி, 62ஆவது வாா்டுக்கு உள்பட்ட நஞ்சுண்டாபுரம் உயா் மட்ட பாலம் அருகில் ராஜவாய்க்கால் பகுதியில் தூா்வாரும் பணி ஆகியவற்றை மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா,
பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தொடா்ந்து, 61-ஆவது வாா்டுக்கு உள்பட்ட
சிங்காநல்லூா் குளத்தேரி பகுதியில் உள்ள கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகளைப் பாா்வையிட்டாா்.
இந்த ஆய்வுகளின் போது, மாநகரத் தலைமைப் பொறியாளா் விஜயகுமாா், உதவி ஆணையா் தட்சிணாமூா்த்தி மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.