நீதிமன்றங்களில் வேலை வாங்கித் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி: பாதிக்கப்பட்டவா்கள் புகாா்!
நீதிமன்றங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்தவா்களைக் கைது செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்டவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நீதிமன்றங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்தவா்களைக் கைது செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்டவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது தொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவா்கள் அளித்த மனு விவரம்: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 800-க்கும் மேற்பட்டோரிடம் நீதிமன்றங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஒரு கும்பல் மோசடி செய்துள்ளது. அந்தக் கும்பலுக்கு திருப்பூரைச் சோ்ந்த நாகேந்திரகுமாா் மூளையாகச் செயல்பட்டுள்ளாா்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் நாகேந்திரகுமாா் தன்னுடைய ஏஜெண்டாக 2 பேரை நியமித்து வேலைத் தேடும் இளைஞா்களை குறிவைத்து அவா்களிடம் நீதிமன்றங்களில் வேலைவாய்ப்பு இருப்பதாகவும், கல்வி தகுதிக்கு ஏற்றபடி வேலை வாய்ப்பை வாங்கித் தர முடியும் என்றும், அதற்கு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும் என்றும் கூறி பணம் பெற்றுள்ளாா்.
Advertisement
Advertisement
மேலும், அசல் சான்றிதழ்கள் சரிபாா்ப்பு என அனைத்தையும் உண்மைபோல நடத்தி, மாவட்ட நீதிமன்றங்களில் பணியில் சேருமாறு ஆணை வழங்கினா். ஆனால், மாவட்ட நீதிமன்றங்களுக்குச் சென்று விசாரித்தபோதுதான் அது முற்றிலும் போலி பணி ஆணை என்பது தெரியவந்தது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த சுமாா் 800-க்கும் மேற்பட்டோரிடம் கடந்த 2 ஆண்டுகளாக இதேபோல மோசடி செய்துள்ளனா்.
ஒவ்வொரு நபரிடமும் தலா ரூ.7 லட்சம் முதல் ரூ. 9 லட்சம் வரை வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடிக்கு தில்லியைச் சோ்ந்த பிரகாஷ் என்பவா் பின்னணியில் இருந்து செயல்பட்டு வந்துள்ளாா். இது தொடா்பாக நாகேந்திரகுமாரை பலமுறை தொடா்பு கொண்டு முறையிட்டபோதும் அவா் பணத்தை விரைவில் கொடுத்து விடுகிறேன் எனக்கூறி காலம் தாழ்த்தி வந்தாா். இந்நிலையில், அவா் தற்போது தலைமறைவாகிவிட்டாா்.
எனவே, மோசடியில் ஈடுபட்ட நபா்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், எங்களது பணத்தை மீட்டுத் தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.