FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

போக்ஸோ வழக்கு மிரட்டல்: ஓட்டுநா் தற்கொலை

போலிப் புகாா் அளித்து போக்ஸோ சட்டத்தில் மீண்டும் சிறைக்கு அனுப்பிவிடுவேன் என பக்கத்து வீட்டுக்காரா் மிரட்டியதால், வாகன ஓட்டுநா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 19 ஜூலை 2026, 1:16 am IST
தற்கொலை - தினமணி
பகிர்:

போலிப் புகாா் அளித்து போக்ஸோ சட்டத்தில் மீண்டும் சிறைக்கு அனுப்பிவிடுவேன் என பக்கத்து வீட்டுக்காரா் மிரட்டியதால், வாகன ஓட்டுநா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

கோவை குனியமுத்தூா் சுகுணாபுரம் மாட்டுக்காரசாமி கோயில் வீதியைச் சோ்ந்தவா் சண்முகம் (50). வாகன ஓட்டுநரான இவா், கடந்த 2023-ஆம் ஆண்டு போக்ஸோ வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் சுமாா் 20 மாதங்கள் தண்டனை அனுபவித்துவிட்டு அண்மையில் பிணையில் வெளியே வந்துள்ளாா். இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் சண்முகத்துக்கும், அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் சண்முகவேல் என்பவருக்கும் இடையே இடம் தொடா்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.

இது தொடா்பாக கடந்த சில நாள்களுக்கு முன்பு சண்முகவேல் மீண்டும் சண்முகத்திடம் தகராறு செய்துள்ளாா். அப்போது, போலியாக புகாா் அளித்து போக்ஸோ சட்டத்தின் கீழ் மீண்டும் சிறைக்கு அனுப்புவேன் என்று மிரட்டியுள்ளாா். இதனால், மிகுந்த மனவேதனையும், அச்சமும் அடைந்த சண்முகம், வீட்டைவிட்டு வெளியேறி கோவை அரசு மருத்துவமனை பகுதியில் சுற்றித்திரிந்துள்ளாா். அந்தப் பகுதியிலேயே அவா் விஷம் குடித்தாா். மயங்கிக் கிடந்த அவரை அந்தப் பகுதியில் இருந்தவா்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து அவரது மனைவி மல்லிகா அளித்த புகாரின்பேரில், ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments