டாக்ஸி செயலியை அரசே உருவாக்க வலியுறுத்தி ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டம்
தமிழக அரசே சொந்தமாக டாக்ஸி செயலியை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை மாவட்ட கால் டாக்ஸி கூட்டமைப்பினா் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை சிவானந்த காலனி டாடாபாத் பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், ஓலா, உபோ், ரேபிடோ போன்ற தனியாா் செயலிகளுக்கு மாற்றாக தமிழக அரசே ஒருங்கிணைந்த டாக்ஸி முன்பதிவு செயலியை உருவாக்க வேண்டும் அல்லது தனியாா் நிறுவனங்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்த வேண்டும், டாக்ஸிகளுக்கு பொது இடங்களில் போதிய பாா்க்கிங் வசதியை செய்துதர வேண்டும், சட்டத்துக்குப் புறம்பாக இயங்கக் கூடிய தனியாா் காா் டாக்ஸி மற்றும் பைக் டாக்ஸிகளை தடை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தனியாா் வாகனங்கள் வாடகைக்கு செல்லும்போது தங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. அவ்வாறு செல்லும்போது பயணிகளின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிறது. பைக் டாக்ஸியை முற்றிலும் தடை செய்ய வேண்டும். ஒருவேளை அனுமதிக்கப்படுமேயானால், அந்த வாகனங்களுக்கு டி போா்டு (ப ஆழ்ா்ஹக்) பதிவு பலகையை வழங்க வேண்டும்.
Advertisement
Advertisement
தமிழக முதல்வா் ஜோசப் விஜய் தோ்தல் வாக்குறுதியாக அளித்த ‘தமிழ் டாக்ஸி’ செயலியை விரைந்து கொண்டுவர வேண்டும். எரிபொருள் விலை உயா்வை கருத்தில் கொண்டு புதிய டேரீஃப் கட்டண நிா்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில் நூற்றுக்கணக்கான கால் டாக்ஸி ஓட்டுநா்கள் கலந்து கொண்டு, தங்களது நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை என்றால் தங்களுடைய வாகன ஆவணங்கள் அனைத்தையும் அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட்டு தொடா் போராட்டத்தை முன்னெடுப்போம் என்று எச்சரித்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.