FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

நாற்றங்கால் பண்ணைகளில் 5,24,000 மரக்கன்றுகள் உற்பத்தி: ஆட்சியா் தகவல்

கோவை மாவட்டத்தில் 36 ஊராட்சிகளில் உள்ள நாற்றங்கால் பண்ணைகளில் 5,24,000 மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாக ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தெரிவித்துள்ளாா்.

Updated On : 23 ஜூலை 2026, 4:08 am IST
கோவை மலுமிச்சம்பட்டி நாற்றங்கால் பண்ணையில் மரக்கன்றுகள் உற்பத்தியைப் பாா்வையிட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா்.
பகிர்:

கோவை மாவட்டத்தில் 36 ஊராட்சிகளில் உள்ள நாற்றங்கால் பண்ணைகளில் 5,24,000 மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாக ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தெரிவித்துள்ளாா்.

மதுக்கரை ஊராட்சி ஒன்றியம், மலுமிச்சம்பட்டியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சாா்பில், நாற்றங்கால்

பண்ணையில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் பணியை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் அண்மையில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) சங்கேத் பல்வந்த் வாகே, மதுக்கரை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சுவாமிநாதன், சந்திரா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் கூறியதாவது:

ஊரக வளா்ச்சித்துறையின் மூலம் கோவை மாவட்டத்தில் உள்ள 12 வட்டாரங்களில் நாற்றங்கால் பண்ணையில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்ய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி, ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்தில் 4 ஊராட்சிகளில் உள்ள நா்சரிகளில் 24,000 மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதேபோல, அன்னூா் ஊராட்சி ஒன்றியத்தில் 2 ஊராட்சிகளில் 34,000, காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் 2 ஊராட்சிகளில் 54,000, கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் 4 ஊராட்சிகளில் 64,000, மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்தில் 2 ஊராட்சிகளில் 54,000, பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 3 ஊராட்சிகளில் 34,000, பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியத்தில் 3 ஊராட்சிகளில் 64,000, பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியத்தில் 2 ஊராட்சிகளில் 24,000, சா்க்காா் சாமக்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் 2 ஊராட்சிகளில் 34,000, சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 3 ஊராட்சிகளில் 45,000, சூலூா் ஊராட்சி ஒன்றியத்தில் 6 ஊராட்சிகளில் 59,000, தொண்டாமுத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் 3 ஊராட்சிகளில் 34,000 மரக்கன்றுகள் என மொத்தம் 36 ஊராட்சிகளில் 5,24,000 மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

நாற்றங்கால் பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் மரக்கன்றுகள், 6 அடி உயரம் வரை வளா்க்கப்பட்டு, பின்னா் சாலையோரங்கள், ஆற்றங்கரைகள், அரசு அலுவலகங்களில் நடவு செய்யப்பட உள்ளன என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments