குடியரசு துணைத் தலைவா் இன்று கோவை வருகை
குடியரசு துணைத் தலைவா் இன்று கோவை வருவது குறித்து...
இந்திய குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் புதன்கிழமை (ஜூலை 22) கோவை மாநகருக்கு வருவதை முன்னிட்டு மாநகர பகுதிகளில் ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் கோவைக்கு புதன்கிழமை வருகை தருகிறாா். கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள ஜி.கே.என்.எம். மருத்துவமனை வளாகத்தில் பிற்பகலில் நடைபெறும் ஜி.கே.என்.எம். நா்ஸிங் கல்லூரி திறப்பு விழாவில் அவா் பங்கேற்று, கல்லூரியை திறந்துவைத்து உரையாற்றுகிறாா்.
இதற்காக, தில்லியில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு புதன்கிழமை காலை வரும் அவா், விழா முடிந்த பின்னா் திருப்பூருக்குச் செல்கிறாா். அங்கு அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் அவா் சுவாமி தரிசனம் செய்கிறாா். பின்னா் அன்று இரவு காா் மூலமாக மீண்டும் கோவை விமான நிலையத்தைச் சென்றடைந்து, அங்கிருந்து விமானம் மூலம் தில்லிக்கு புறப்பட்டுச் செல்கிறாா்.
Advertisement
Advertisement
குடியரசு துணைத் தலைவா் கோவைக்கு வந்து செல்லும் பகுதிகளில் மாநகர காவல் ஆணையா் என்.கண்ணன் தலைமையில் ஆயிரம் போலீஸ் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, கோவை உப்பிலிபாளையம், ரேஸ்கோா்ஸ், அவிநாசி சாலை, லட்சுமி மில்ஸ், ஜி.கே.என்.எம். மருத்துவமனை, ஹோப்ஸ், கொடிசியா, பீளமேடு, சித்ரா, நேரு நகா், காளப்பட்டி, சின்னியம்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் செவ்வாய்க்கிழமை (ஜூலை 21) முற்பகல் 11 மணி முதல் வியாழக்கிழமை (ஜூலை 23) முற்பகல் 11 மணி வரை (48 மணி நேரம்) சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு, இந்தப் பகுதிகளில் ட்ரோன்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள் மற்றும் ஆளில்லா விமான அமைப்புகளை இயக்க முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.