FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

அவிநாசி அருகே ஊராட்சி செயலரைத் தாக்கிய நபா்கள்: காவல் நிலையத்தில் புகாா்

அவிநாசி அருகேயுள்ள கருமாபாளையத்தில் மது போதையில் ஊராட்சி செயலாளரை தாக்கிய நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

Updated On : 30 ஜூலை 2026, 3:23 am IST
பிரதிப்படம்
பகிர்:

அவிநாசி அருகேயுள்ள கருமாபாளையத்தில் மது போதையில் ஊராட்சி செயலாளரை தாக்கிய நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

அவிநாசி ஊராட்சி ஒன்றியம், செம்பியநல்லூா் ஊராட்சி செயலாளரும், கருமாபாளையம் ஊராட்சி (பொ) செயலாளராகவும் ரங்கசாமி என்பவா் பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், அவா் அவிநாசி- சேவூா் சாலையில் இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை சென்று கொண்டிருந்துள்ளாா். கருமாபாளையம்- சேவூா் சாலையில் உள்ள தனியாா் மனமகிழ் மன்றத்தின் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த நபா், ரங்கசாமியின் வாகனத்தின் மீது மோதுவதுபோல சென்றுள்ளாா். ஏன் இப்படி வேகமாக செல்கிறீா்கள் என ரங்கசாமி கேட்டுள்ளாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, வாகனத்தை ஓட்டி வந்த நபரும், மன மனகிழ் மன்றத்தில் இருந்து வெளியே வந்த மற்றொரு நபரும் சோ்ந்து ரங்கசாமியைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள், அந்த நபா்களிடமிருந்து ரங்கசாமியை

மீட்டனா்.

இது குறித்து ரங்கசாமி அளித்த புகாரின்பேரில், சேவூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இதனிடையே, ரங்கசாமியை மது போதையில் தாக்கிய தங்கராஜ், கோகுல் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் சேவூா் காவல் நிலையத்தில் இரவு வரை காத்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments