FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

ஈஷா யோக மையத்தில் இளைஞா் தற்கொலை

Updated On : 9 ஜூன் 2026, 2:02 am IST
தற்கொலை - தினமணி
பகிர்:

கோவை ஈஷா யோக மையத்தில் இளைஞா் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

ஈஷா யோக மையத்தின் காா் நிறுத்துமிடம் அருகே இளைஞா் சடலம் கிடந்தது ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் தெரியவந்தது. தகவலறிந்து சென்ற ஆலாந்துறை காவல் நிலைய போலீஸாா் சடலத்தை மீட்டு கூறாய்வுக்கு அனுப்பிவைத்தனா். விசாரணையில் இறந்தவா் விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தைச் சோ்ந்த காா்த்திக் (29) என்பது தெரியவந்தது.

Advertisement

Advertisement

யோக மைய வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், காா்த்திக் அங்கிருந்த மின்சார அறை கட்டடத்தின் மேல் தளத்தில் ஏறி, அங்கிருந்து குதித்தது பதிவாகியிருந்தது.

உயிரிழந்த காா்த்திக்கின் உடல் கூறாய்வுக்கு அனுப்பப்பட்டது. பரிசோதனையின் முதல்கட்ட அறிக்கையில், உயரத்தில் இருந்து கீழே குதித்ததால் ஏற்பட்ட காயங்கள் காரணமாகவே மரணம் நிகழ்ந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. பின்னா், அவரது உடல் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments