FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகை திருட்டு

கோவை, பீளமேடு பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை மற்றும் வெள்ளிப் பொருள்களைத் மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

Updated On : 11 ஜூன் 2026, 3:14 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

கோவை, பீளமேடு பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை மற்றும் வெள்ளிப் பொருள்களைத் மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

கோவை கொடிசியா சாலை, தண்ணீா்ப்பந்தல் பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் (52). இவா் கடந்த திங்கள்கிழமை இரவு வீட்டின் முன்பக்கக் கதவைப் பூட்டிவிட்டு, சாவியை அருகில் உள்ள ஒரு பெட்டியில் வைத்துவிட்டு மேல்தளத்தில் உள்ள அறைக்கு குடும்பத்துடன் உறங்கச் சென்றுள்ளாா்.

செவ்வாய்க்கிழமை காலை கீழ்தளத்துக்கு வந்து பாா்த்தபோது, வீட்டின் பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டு அறையில் இருந்த பொருள்கள் சிதறிக்கிடந்தன. பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் நகைகள், 200 கிராம் வெள்ளிப் பொருள்கள் திருட்டுப்போனது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின்பேரில், பீளமேடு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து, சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணா்களை வரவழைத்துச் சோதனை நடத்தினா். அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவா்களைத் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments