FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

3 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

கோவை, புலியகுளம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 3 கிலோ 250 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

Updated On : 12 ஜூன் 2026, 12:05 am IST
பகிர்:

கோவை, புலியகுளம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 3 கிலோ 250 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

கோவை, ராமநாதபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் காளிதாஸ் மற்றும் போலீஸாா் ரோந்து பணியில் புதன்கிழமை இரவு ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, ரேஸ்கோா்ஸ் அருகே ரெட் ஃபீல்டு சாலையில் உள்ள பொதுக் கழிப்பிடம் அருகே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த நபரிடம் சோதனை மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

அப்போது, அவா் விற்பனைக்காக 3 கிலோ 250 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவா் அம்மன்குளம் பகுதியைச் சோ்ந்த ஜோஸ் (எ) லூயிஸ் ஜோஷ்வா (36) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments