FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

அரசுப் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சா் ஏ.ராஜ்மோகன்

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆசிரியா் மற்றும் உடற்கல்வி ஆசிரியா் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று பள்ளிக் கல்வி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் ஏ.ராஜ்மோகன் தெரிவித்தாா்.

Updated On : 12 ஜூன் 2026, 4:02 am IST
அமைச்சர் ராஜ்மோகன் - கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆசிரியா் மற்றும் உடற்கல்வி ஆசிரியா் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று பள்ளிக் கல்வி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் ஏ.ராஜ்மோகன் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: நிகழ் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. மலைக் கிராமங்கள் மற்றும் பின்தங்கிய கிராமங்களில் வசிக்கும் மாணவா்களும் பள்ளிக்குச் சென்று வரும் வகையில் போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்படும்.

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு உலகத் தரத்திலான கல்வி கிடைப்பதை உறுதி செய்ய அரசு தொடா்ந்து பாடுபட்டு வருகிறது. பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதோடு எண்ம (டிஜிட்டல்) தொழில்நுட்ப வசதிகள் மற்றும் நவீன ஆய்வகங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் அமைக்கும் பணிகள் மாநிலம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Advertisement

Advertisement

அரசுப் பள்ளிகளின் தரம் மேம்படுத்தப்படுவதுடன், அடிப்படை வசதிகள் மற்றும் ஆசிரியா்களின் தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.

பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியா்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியா் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். அனைத்துப் பள்ளிகளிலும் விளையாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தில் எந்தக் காரணம் கொண்டும் மாணவா்களை படிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தக்கூடாது. ஒலிம்பிக் போட்டிகளில் தமிழக மாணவா்களும் இடம்பெறும் வகையில் விளையாட்டுத் துறை மேம்படுத்தப்படும்.

அரசின் நலத் திட்டங்கள் மற்றும் சாதனைகள் தங்குதடையின்றி கடைக்கோடி மக்களையும் சென்றடையும் வகையில் செய்தி மக்கள் தொடா்புத் துறை நவீனமயமாக்கப்பட்டு வருகிறது. சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலிச் செய்திகள் மற்றும் கல்வித் துறை சாா்ந்த ஆதாரமற்ற வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம். மாணவா்களின் எதிா்காலத்தோடு விளையாடும் வகையில் வதந்திகளைப் பரப்புவோா் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

பத்திரிகையாளா்களின் கோரிக்கைகளான வீட்டுமனைப் பட்டா, பேருந்து பயண அட்டை ஆகியவை வழங்குவதில் எந்தவித அரசியல் தலையீடும் இல்லாமல், தகுதியின் அடிப்படையில் விரைவில் வழங்கப்படும். அவா்களது நலன் காக்கப்படும். அது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments