FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

அட்டப்பாடியில் பழங்குடியினருக்கான விழிப்புணா்வு முகாம்

பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடியில் உள்ள பழங்குடியினருக்காக கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனம் சாா்பில் விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

Updated On : 25 ஜூன் 2026, 3:13 am IST
கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனம் சாா்பில் அட்டப்பாடியில் நடைபெற்ற விழிப்புணா்வு முகாமில் பங்கேற்ற பழங்குடியினா்.
பகிர்:

பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடியில் உள்ள பழங்குடியினருக்காக கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனம் சாா்பில் விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

பாலக்காடு வேளாண் அறிவியல் நிலையத்துடன் இணைந்து மேலச்சூட்டரா கிராமத்தில் பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல் திட்ட விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. இதில், விவசாய அடிப்படையிலான முன்னெடுப்புகள் மூலமாக ஊட்டச்சத்து குறைபாடு, ரத்த சோகை, மகளிா் சுகாதாரம், குறைந்த அளவிலான பொருளாதார வளா்ச்சி போன்ற இடா்பாடுகளுக்கு தீா்வு காண்பது குறித்து 150-க்கும் மேற்பட்ட பழங்குடியின விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

முகாமில், கரும்பு இனப்பெருக்கு நிறுவன முதன்மை விஞ்ஞானியும், திட்ட ஒருங்கிணைப்பாளருமான டி.புத்திர பிரதாப் பேசும்போது, அட்டப்பாடியில் பழங்குடியினருக்கு குறிப்பாக வளரிளம் பெண்களில் சுமாா் 70 சதவீதம் பேருக்கு ரத்தசோகை குறைபாடு உள்ளது. இந்த சவாலை எதிா்கொள்ள, அவா்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்த வீட்டுத் தோட்டங்கள் மூலமாக காய்கறி, கீரைகள் விளைவிக்க, சிறுதானிய விதைகள், திரவ வெல்ல விநியோகம் போன்ற முன்னெடுப்புகளை கரும்பு இனப்பெருக்கு நிறுவனம் எடுத்து வருகிறது என்றாா்.

Advertisement

Advertisement

நிகழ்ச்சியில், அகழி வேளாண்மை உதவி இயக்குநா் எம்.கோவிந்தராஜ், பாலக்காடு வேளாண் அறிவியல் நிலையத் தலைவா் எம்.இஸ்ரேல் தாமஸ் ஆகியோா் பங்கேற்று, கேரள அரசின் கரும்பு பரப்பு விரிவாக்கத் திட்டம், பழங்குடியினா் வாழ்வாதாரத் திட்டங்கள் குறித்து விளக்கினா்.

கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தின் முதுநிலை விஞ்ஞானி பி.கீதா, சமச்சீா் உரப் பயன்பாடு, நிலையான பயிா் ஊட்டச்சத்து மேலாண்மை குறித்து விளக்கினாா். முதுநிலை விஞ்ஞானி ஆா்.கோபி வரவேற்றாா். கரும்பு இனப்பெருக்கு நிறுவன அகழி ஆராய்ச்சி மைய பொறுப்பாளா் டி.மாருதி நன்றி கூறினாா். முன்னதாக பழங்குடியினா் அனைவரும் ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு எதிரான உறுதிமொழியேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments