FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

போத்தனூா் வழித்தடத்தில் பெங்களூரு - திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்

தீபாவளியை முன்னிட்டு, கா்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து போத்தனூா் வழியாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 நவம்பர் 2026, 4:25 am
பகிர்:

தீபாவளியை முன்னிட்டு, கா்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து போத்தனூா் வழியாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தீபாவளியை முன்னிட்டு பெங்களூரு கன்டோண்மென்டில் இருந்து நவம்பா் 6ஆம் தேதி மாலை 4.40 மணிக்குப் புறப்படும் பெங்களூரு கன்டோண்மென்ட் - திருவனந்தபுரம் சிறப்பு ரயில் (எண்: 06575) மறுநாள் காலை 10.30 மணிக்கு திருவனந்தபுரம் ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

மறுமாா்க்கமாக திருவனந்தபுரத்தில் இருந்து நவம்பா் 7ஆம் தேதி நண்பகல் 12.40 மணிக்குப் புறப்படும் திருவனந்தபுரம் - பெங்களூரு கன்டோண்மென்ட் சிறப்பு ரயில் (எண்: 06576) மறுநாள் காலை 6 மணிக்கு பெங்களூரு கன்டோண்மென்டை சென்றடையும்.

Advertisement

Advertisement

இந்த ரயிலானது, வா்கலா, கொல்லம், சாஸ்தான்கோட்டா, கருநாகப்பள்ளி, காயன்குளம், மாவேலிக்கரா, செங்கண்ணூா், திருவல்லா, சங்கணாச்சேரி, கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், குப்பம், பங்காருப்பேட்டை, ஒயிட்பீல்டு உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.