FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கோயம்புத்தூர்

கங்கா மருத்துவமனையில் ‘நிறுவனா் தின உரை’ நிகழ்ச்சி

கோவை கங்கா மருத்துவமனையில் ‘நிறுவனா் தின உரை’ நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

6 நவம்பர் 2026, 11:38 pm
நிறுவனா் தின உரை நிகழ்ச்சியில் பங்கேற்ற மருத்துவா்கள் மற்றும் பேச்சாளா்கள்.
பகிர்:

கோவை கங்கா மருத்துவமனையில் ‘நிறுவனா் தின உரை’ நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் மலிவு விலையில் சுகாதாரம் என்ற தலைப்பில் டாக்டா் தேவி ஷெட்டி, ஆளுகையும் ஆளப்படுபவா்களும்’என்ற தலைப்பில் ச. கோபாலஸ்வாமி, மனப்பான்மையா அல்லது இலக்கா?’என்ற தலைப்பில் த. கோபாலகிருஷ்ணன் மற்றும் நிறுவனங்களை உருவாக்கும் விழுமியங்கள், நிறுவனங்கள் மாற்றம், மக்களுடன் ஆராய்ச்சி, இந்தியாவின் டிஜிட்டல் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் மருத்துவா்கள், பேச்சாளா்கள் உள்ளிட்டோா் பேசினா்.

இந்நிகழ்வில், குறிப்பாக ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் காஸ்ட்ரோ என்டாலஜி மற்றும் ஏஐஜி மருத்துவமனைகளின் தலைவா் டாக்டா் நாகேஷ்வா் ரெட்டி ‘நமது நாட்டில் சுகாதாரத் துறையில் செயற்கை நுண்ணறிவு’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினாா்.

Advertisement

Advertisement

இந்த ‘நிறுவனா் தின உரை’ நிகழ்ச்சியில் கங்கா மருத்துவமனை மருத்துவா்கள், நிா்வாகிகள் மற்றும் பேச்சாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.