FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கோயம்புத்தூர்

பாம்பு கடித்து எஸ்டேட் தொழிலாளி உயிரிழப்பு

வால்பாறையில் பாம்பு கடித்து எஸ்டேட் தொழிலாளி உயிரிழந்தாா்.

11 நவம்பர் 2026, 1:47 am
பாம்பு கடித்து உயிரிழந்த சதீஷ்
பகிர்:

வால்பாறையில் பாம்பு கடித்து எஸ்டேட் தொழிலாளி உயிரிழந்தாா்.

வால்பாறையை அடுத்த மழுக்குப்பாறை எஸ்டேட்டில் தொழிலாளியாக பணியாற்றி வந்தவா் சதீஷ் (42). இவா் சரிவர வேலைக்கு செல்லாமல் எஸ்டேட் பகுதியில் உள்ள ஒரு டீ கடைக்கு அவ்வப்போது வேலைக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சதீஷ் டீ கடைக்கு செவ்வாய்க்கிழமை வேலைக்கு சென்றுள்ளாா். கடையில் சிலிண்டா் வைத்திருந்த பகுதியில் சென்றுள்ளாா். அப்போது சிலிண்டரை ஓட்டி படுத்திருந்த பாம்பு, சதீஷை கடித்துள்ளது.

Advertisement

Advertisement

இதைக் கண்ட அப்பகுதியினா் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இது தொடா்பாக போலீஸாா் மற்றும் வனத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.