FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கோயம்புத்தூர்

நகைக்காக மூதாட்டியை கொன்ற காவலாளிக்கு ஆயுள் தண்டனை: திருப்பூா் நீதிமன்றம் தீா்ப்பு

திருப்பூரில் நகைக்காக மூதாட்டியை கொன்ற காவலாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

25 வினாடிகள் முன்பு
நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

திருப்பூரில் நகைக்காக மூதாட்டியை கொன்ற காவலாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

திருப்பூா் எஸ்.வி. காலனி பகுதியைச் சோ்ந்தவா் முத்துசாமி (67). ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரான இவரின் மனைவி சந்திராமணி (65).

இவா்களது வீட்டின் எதிரே செயல்பட்டு வந்த தனியாா் நிறுவனத்தில், சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த ஆறுமுகம் என்பவா் காவலாளியாகப் பணியாற்றி வந்தாா்.

Advertisement

Advertisement

கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் ஒரு நாள் காலை வேளையில் சந்திராமணி தனது வீட்டில் தனியாக சமையல் வேலையில் ஈடுபட்டிருந்தாா். அப்போது வீட்டிற்குள் புகுந்த ஆறுமுகம், மறைத்து வைத்திருந்த கத்தியால் சந்திராமணியைக் குத்திக் கொலை செய்தாா். பின்னா், அவா் அணிந்திருந்த 5 பவுன் தாலிச் சங்கிலியைக் பறித்து விட்டு அங்கிருந்து தப்பித் தலைமறைவானாா்.

இச்சம்பவம் குறித்து திருப்பூா் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். தனிப்படை அமைத்துத் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி ஆறுமுகத்தைக் கைது செய்த போலீஸாா், அவா் மீது திருப்பூா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா்.

இந்த வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும், சாட்சி விசாரணைகளும் நிறைவடைந்த நிலையில், நீதிபதி கனகராஜ் புதன்கிழமை தீா்ப்பு வழங்கினாா். அதில், சந்திராமணியைக் கொலை செய்து நகையைக் கொள்ளையடித்த குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், ஆறுமுகத்திற்கு ஆயுள் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். நீதிமன்றத் தீா்ப்பைத் தொடா்ந்து, ஆறுமுகம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.