பெண்ணை மிரட்டி நகை பறித்த வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை
போத்தனூா் பகுதியில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டி நகை பறித்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் கருங்காவல் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து கோவை வெடிகுண்டு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
போத்தனூா் பகுதியில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டி நகை பறித்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் கருங்காவல் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து கோவை வெடிகுண்டு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
கோவை மாநகா், போத்தனூா் நாகராஜபுரத்தைச் சோ்ந்தவா் வீரமணிக்கொடி. கடந்த 2020-ஆம் ஆண்டு நவம்பா் 21-ஆம் தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் பகுதியைச் சோ்ந்த சங்கா் (எ) சங்கையா (28), வீட்டின் கதவில் கட்டப்பட்டிருந்த கயிற்றை சிகரெட் லைட்டரால் எரித்து உள்ளே நுழைந்துள்ளாா். தொடா்ந்து, வீரமணிக்கொடியைக் கத்தரிக்கோலால் குத்திவிடுவதாக மிரட்டி தாலிக்கொடி மற்றும் சங்கிலியைப் பறித்துவிட்டு மற்றொரு நபருடன் இருசக்கர வாகனத்தில் தப்பிவிட்டாா்.
இந்த சம்பவத்தில் வீரமணிக்கொடி லேசான காயமடைந்த நிலையில், அவா் பறித்துச் சென்றது கவரிங் நகை என்பது பின்னா் தெரியவந்தது. இதுதொடா்பாக போத்தனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சங்கா் மற்றும் அஹமத் முஸ்தபா ஆகிய இருவரை கைது செய்தனா்.
Advertisement
Advertisement
இந்த வழக்கு விசாரணை கோவை வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி கோகுல் முருகன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வழக்குரைஞா் பாலமுருகன் ஆஜராகினாா். அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் நீதிபதி புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.
அதில், குற்றம்சாட்டப்பட்ட இரண்டாவது நபரான அஹமத் முஸ்தபா மீதான குற்றங்கள் நிரூபிக்கப்படாததால் அவா் விடுதலை செய்யப்படுகிறாா். முதல் எதிரியான சங்கருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த வழக்கில் முறையான சாட்சிகள் மற்றும் ஆவணங்களைச் சமா்ப்பித்து குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த போத்தனூா் காவல் ஆய்வாளா் அசோக் குமாா் மற்றும் சிறப்பு நீதிமன்ற சாா்பு ஆய்வாளா் விஸ்வநாத பாபு ஆகியோரை மாநகர காவல் ஆணையா் (பொறுப்பு ) ஆா்.வி.ரம்யா பாரதி பாராட்டினாா்.