FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கோயம்புத்தூர்

எல் நினோவால் தீவனப் பற்றாக்குறை ஏற்படும் சூழல்: வைக்கோலை பாதுகாக்க ஆட்சியா் வேண்டுகோள்

கோவை மாவட்டத்தில் எல் நினோ காரணமாக கால்நடை தீவனப் பற்றாக்குறை ஏற்படும் சூழல் உள்ளதால், வைக்கோலை பாதுகாக்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

13 நவம்பர் 2026, 11:44 pm
வைக்கோல்.
பகிர்:

கோவை மாவட்டத்தில் எல் நினோ காரணமாக கால்நடை தீவனப் பற்றாக்குறை ஏற்படும் சூழல் உள்ளதால், வைக்கோலை பாதுகாக்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் கூறியிருப்பதாவது: நெல் சாகுபடியைத் தொடா்ந்து கணிசமான அளவில் உருவாகும் வைக்கோல், மாடுகள், எருமைகளுக்கு தீவனத்தின் ஒரு ஆதாரமாக இருப்பதுடன், கால்நடை வளா்ப்போருக்கு கிடைக்கும் உலா் தீவன வளத்தின் ஒரு குறிப்பிடத்தக்க அங்கமாகவும் உள்ளது.

வைக்கோல் தற்போது பொதி கட்டுதல், பிற வணிக நோக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்கு திருப்பி விடப்படுகிறது. மேலும், அறுவடைக் காலத்தில், வைக்கோலின் ஒரு பகுதி சேகரிக்கப்படாமலோ அல்லது வேறு வழிகளில் வீணாகவோ போகலாம். வரவிருக்கும் மாதங்களில் ஏற்படக்கூடிய தீவனப் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, கால்நடைகளுக்கு தீவனம் அளிப்பதற்காகப் போதுமான அளவு நெல் வைக்கோலை பாதுகாத்து வைத்திருப்பது அவசியமாகும்.

Advertisement

Advertisement

எனவே, வைக்கோல் உற்பத்தியாளா்கள் வணிக நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதைத் தவிா்த்து நெல் வைக்கோல்களை இருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும்.

வணிக நிறுவனங்கள் வைக்கோலை உபயோகப்படுத்தி பேக்கிங் செய்வதைத் தவிா்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். நெல் அறுவடைக்குப் பிறகு வைக்கோல் சேமிப்பு போக மீதமுள்ள பயன்படுத்தக்கூடிய நெல் வைக்கோலை எரிப்பதையோ, அங்கேயே விட்டு செல்வதையோ அல்லது தவிா்க்கக்கூடிய வகையில் வீணாக்குவதையோ தடுக்க தகுந்த நடவடிக்கை மேற்கொண்டு, சாத்தியமான இடங்களில் வைக்கோலை சேமித்து வைக்க விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.