FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கோயம்புத்தூர்

மதம் மாறியவா்களுக்கான இடஒதுக்கீடு விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சீராய்வு மனுவை தவெக அரசு திரும்பப் பெற பாஜக வலியுறுத்தல்

மதம் மாறியவா்களுக்குப் பிற்படுத்தப்பட்டோா் (ஆஇ) சான்றிதழ் வழங்குவது தொடா்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள சீராய்வு மனுவைத் தவெக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று பாஜக மாநிலப் பொருளாளா் எஸ்.ஆா். சேகா் வலியுறுத்தியுள்ளாா்.

9 வினாடிகள் முன்பு
பாஜக கொடி - கோப்புப்படம்
பகிர்:

மதம் மாறியவா்களுக்குப் பிற்படுத்தப்பட்டோா் (ஆஇ) சான்றிதழ் வழங்குவது தொடா்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள சீராய்வு மனுவைத் தவெக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று பாஜக மாநிலப் பொருளாளா் எஸ்.ஆா். சேகா் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மதம் மாறியவா்களுக்குப் பிற்படுத்தப்பட்டோா் ஜாதிச் சான்றிதழ் வழங்க முடியாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை ஏற்கெனவே தீா்ப்பளித்துள்ளது. இதை எதிா்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீா்ப்பை எதிா்த்து தமிழக அரசு மீண்டும் சீராய்வு மனு தாக்கல் செய்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. உயா்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகிய இரண்டிலும் ஏற்கெனவே தோல்வியடைந்த ஒரு விவகாரத்துக்காக, பெரும்பான்மை ஹிந்து மக்களின் வரிப் பணத்தை வழக்குரைஞா் கட்டணமாக மீண்டும் மீண்டும் செலவிடுவது ஏற்புடையதல்ல.

Advertisement

Advertisement

மதச்சாா்பற்ற ஒரு அரசு எந்தவொரு மத மாற்றத்தையும் ஊக்குவிக்கக் கூடாது. முந்தைய திமுக அரசின் நிலைப்பாட்டைப்போலவே, தற்போதைய தவெக அரசும் செயல்படக் கூடாது.

பெரும்பான்மை மக்களின் உரிமைகளைப் பாதிக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்தச் சீராய்வு மனுவை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.