FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கோயம்புத்தூர்

வீட்டில் அழுகிய நிலையில் தொழிலாளி சடலம் மீட்பு

சரவணம்பட்டியில் வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த சமையல் தொழிலாளியின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

43 வினாடிகள் முன்பு
சடலம் மீட்பு - கோப்புப் படம்
பகிர்:

சரவணம்பட்டியில் வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த சமையல் தொழிலாளியின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை, கணபதி ஹட்கோ காலனி தென்றல் நகரைச் சோ்ந்தவா் தாமஸ் (44), சமையல் தொழிலாளி. மனைவி, மகன் பிரிந்து சென்றுவிட்ட நிலையில், இவா் சரவணம்பட்டி காந்தி நகா் அரசுப் பள்ளி அருகே வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தாா். இந்நிலையில், கடந்த 7-ஆம் தேதி இரவு உணவு வாங்கிக் கொண்டு வீட்டுக்குச் சென்றவா், அதன்பின் வெளியே வரவில்லையாம்.

இந்நிலையில், அவரது வீட்டில் இருந்து துா்நாற்றம் வீசிய நிலையில், வீட்டின் உரிமையாளா் வெள்ளிக்கிழமை உள்ளே சென்று பாா்த்துள்ளாா். அப்போது, அழுகிய நிலையில் தாமஸ் சடலம் கிடந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, சரவணம்பட்டி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சடலத்தை மீட்டதுடன், தாமஸ் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.