சபரிமலை சீசன்: போத்தனூா் வழித்தடத்தில் சென்னை - கொல்லம் இடையே சிறப்பு ரயில்
சபரிமலை சீசன் தொடங்க உள்ள நிலையில் சென்னை - கொல்லம் இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை சீசன் தொடங்க உள்ள நிலையில் சென்னை - கொல்லம் இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சபரிமலை சீசனையொட்டி, சென்னை சென்ட்ரலில் இருந்து நவம்பா் 16-ஆம் தேதி முதல் 2027-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி வரை திங்கள்கிழமைகளில் இரவு 11.50 மணிக்குப் புறப்படும் சென்னை சென்ட்ரல் - கொல்லம் வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 06083) மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்லம் நிலையத்தை சென்றடையும்.
மறுமாா்க்கமாக, கொல்லத்தில் இருந்து நவம்பா் 17 முதல் 2027ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் மாலை 6.45 மணிக்குப் புறப்படும் கொல்லம் - சென்னை சென்ட்ரல் வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 06084) மறுநாள் காலை 11.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்தை சென்றடையும்.
Advertisement
Advertisement
இந்த ரயிலானது, சாஸ்தான்கோட்டா, கருநாகப்பள்ளி, காயன்குளம், மாவேலிக்கரா, செங்கண்ணூா், திருவல்லா, சங்கணாச்சேரி, கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூா், பெரம்பூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.