FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சபரிமலை பக்தர்களுக்காக சென்னை - கொல்லம் சிறப்பு ரயில் அறிவிப்பு!

சென்னை - கொல்லம் இடையே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டிருப்பது பற்றி...

ரயில் - கோப்புப் படம்
பகிர்:

சபரிமலை பக்தர்களின் வசதிக்காக சென்னை மற்றும் கொல்லம் இடையே 2 மாதங்களுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மண்டல பூஜைக்காக வருகின்ற நவ. 16 அன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து, மகரவிளக்கு பூஜை வரை 2 மாத காலத்துக்க்கு பக்தர்களின் தரிசனத்துக்காக நடை திறந்திருக்கும்.

இந்த காலகட்டத்தில் நாளொன்றுக்கு 80,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். தமிழ்நாட்டிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலை செல்வார்கள்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், தமிழ்நாடு பக்தர்களின் வசதிக்காக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து கொல்லம் ரயில் நிலையத்துக்கு வாராந்திர சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகின்ற நவ. 21 முதல் ஜன. 23 வரை இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில் (06121) சென்னை எழும்பூரிலிருந்து வாரந்தோறும் சனிக்கிழமை இரவு 11.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

மறுபுறம் நவ. 22 முதல் ஜன. 24 வரை இயக்கப்படும் ரயில் (06122) கொல்லத்தில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

இந்த ரயில் பெரம்பூர், காட்பாடி, ஈரோடு, போத்தனூர், கோட்டயம் வழியாக கொல்லத்துக்கு இயக்கப்படுகிறது.

summary

Special train from Chennai to Kollam announced for Sabarimala pilgrims!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.