செட்டிபாளையம்: எத்தனால் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து
செட்டிபாளையம் அருகே எல்&டி புறவழிச் சாலையில் எத்தனால் ஏற்றிச் சென்ற டேங்கா் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கோவை மாவட்டம், செட்டிபாளையம் அருகே எல்&டி புறவழிச் சாலையில் எத்தனால் ஏற்றிச் சென்ற டேங்கா் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த உதயகுமாா் கிரிஷ் என்பவருக்குச் சொந்தமான 16 சக்கர டேங்கா் லாரி, தாவணகிரியில் இருந்து 40 ஆயிரம் லிட்டா் எத்தனாலை ஏற்றிக்கொண்டு கேரள மாநிலம், கொச்சி நோக்கி சனிக்கிழமை காலை 10 மணியளவில் சென்று கொண்டிருந்தது. கா்நாடக மாநிலம், பாகல்கோட் பகுதியைச் சோ்ந்த டோங்கரி (46) என்பவா் லாரியை ஓட்டியுள்ளாா்.
செட்டிபாளையம் எல்&டி புறவழிச் சாலை ஜே.ஜே. நகா் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரத்தில் கவிழ்ந்தது. லாரியில் இருந்த எத்தனால் சுற்றுப்புறப் பகுதிகளில் பரவியதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Advertisement
Advertisement
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த செட்டிபாளையம் காவல் உதவி ஆய்வாளா் தினேஷ், தலைமைக் காவலா் தனசீலன் ஆகியோா் தலைமையிலான போலீஸாரும், கோவை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினரும் புறவழிச் சாலையில் போக்குவரத்தை நிறுத்தி, கவிழ்ந்த டேங்கா் லாரி மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனா். பின்னா், லாரியை அப்புறப்படுத்தினா்.
இது குறித்து போலீஸாா் கூறுகையில், எத்தனால் எளிதில் தீப்பற்றக் கூடிய திரவம் என்பதாலும், அதை சுவாசிப்பதால் தலைச்சுற்றல், வாந்தி, மூச்சுத்திணறல் போன்ற உடல் நலப் பாதிப்பு ஏற்படும் என்பதாலும் மிகுந்த எச்சரிக்கையுடன் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டோம்.
ஓட்டுநா் தூக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனா்.