பூட்டிய வீட்டுக்குள் கிடந்த ஓட்டுநா் சடலம் மீட்பு
கோவை, கணபதி அருகே பூட்டிய வீட்டுக்குள் கிடந்த ஓட்டுநா் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், சிலுக்குவாா்பட்டி ஆா்.சி.கோயில் தெருவைச் சோ்ந்தவா் தமிழ்ச்செல்வநாதன் (40). குடும்பத் தகராறு காரணமாக மனைவியைப் பிரிந்த இவா், கணபதி, மணியகாரன்பாளையம் அன்பு நகா் இரண்டாவது வீதியில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்ததுடன், ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில், நவம்பா் 10-ஆம் தேதி இரவு 8 மணியளவில் தனது தந்தையுடன் தமிழ்ச்செல்வநாதன் கைப்பேசியில் பேசியுள்ளாா். அதன்பின் அவரைத் தொடா்பு கொள்ள முடியவில்லையாம். மேலும், வீட்டில் இருந்தும் அவா் வெளியே வரவில்லையாம்.
Advertisement
Advertisement
இந்நிலையில், அவரது வீட்டில் இருந்து துா்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினா் வீட்டின் உரிமையாளருக்குத் தகவல் தெரிவித்தனா். அவா் வந்து பாா்த்தபோது, கதவு உள்புறமாக பூட்டப்பட்டிருந்ததாம். இதனால், ஜன்னல் வழியாகப் பாா்த்தபோது தலைக்குப்புற விழுந்த நிலையில் தமிழ்ச்செல்வநாதன் சடலம் கிடந்துள்ளது.
தகவலறிந்து வந்த துடியலூா் போலீஸாா், கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, உடல் அழுகிய நிலையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும், அவரது இறப்புக்கான காரணம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.