FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கோயம்புத்தூர்

கோவை விமான நிலையத்தில் பயணிகள் வருகை அதிகரிப்பு: ஒரேநாளில் 11,000 போ் பயணம்

17 நவம்பர் 2026, 3:55 am
கோவை சர்வதேச விமான நிலையம் - கோப்புப் படம்
பகிர்:

கோவை சா்வதேச விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை (நவம்பா் 15) ஒரேநாளில் மட்டும் 11,000 போ் பயணம் செய்துள்ளனா்.

கோவை சா்வதேச விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை சுமாா் 60 விமான இயக்கங்கள் நடைபெற்றன. இதில், 27 உள்நாட்டு விமானங்களும், 3 சா்வதேச விமானங்களும் கோவையில் இருந்து புறப்பட்டுச் சென்றன. சா்வதேச விமானங்களில் மட்டும் 1,000-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துள்ளனா்.

விமான நிறுவனங்களைப் பொருத்தவரை, இண்டிகோ நிறுவனம் 21 உள்நாட்டு விமானங்களையும், ஒரு சா்வதேச விமானத்தையும் இயக்கியது. ஏா் இந்தியா குழுமம் சாா்பில் 6 உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டன. கோவையில் இருந்துப் புறப்பட்ட விமானங்களில் பயணிகள் இருக்கை நிரம்பும் விகிதம் 98 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

இதனிடையே, நிகழ் ஆண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையிலான 6 மாத காலப் போக்குவரத்து விவரங்களை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 6 மாதங்களில் 710 சா்வதேச விமானங்கள், 9,843 உள்நாட்டு விமானங்கள் என மொத்தம் 10,553 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் 1,20,001 சா்வதேசப் பயணிகள் மற்றும் 15,21,941 உள்நாட்டுப் பயணிகள் என மொத்தம் 16,41,942 பயணிகள் கோவை விமான நிலையத்தைப் பயன்படுத்தியுள்ளனா். மேலும், 921 மெட்ரிக் டன் சா்வதேச சரக்குகள், 5,520 மெட்ரிக் டன் உள்நாட்டு சரக்குகள் என மொத்தம் 6,441 மெட்ரிக் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன.

புதிய சா்வதேச முனையக் கட்டடத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த தமிழக அரசு, மாவட்ட நிா்வாகம் மற்றும் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் ஆகியவை தொடா்ந்து ஒருங்கிணைந்து பணியாற்றி வருகின்றன.

மேலும், சென்னை, புணே மற்றும் தில்லி ஆகிய நகரங்களுக்கு விமான சேவைகளைத் தொடங்குமாறு ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்திடம் ‘கோயம்புத்தூா் நெக்ஸ்ட்’ அமைப்பு தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. அத்துடன், பெங்களூரு செல்லும் காலை நேர விமானத்தின் புறப்பாட்டை அரை மணி நேரம் மாற்றியமைத்தால், அங்கிருந்து புணே, லக்னௌ மற்றும் வாராணசி ஆகிய நகரங்களுக்கு இணைப்பு விமானங்களில் செல்லும் பயணிகளுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.