அரிசி, பருப்பை இருப்பு வைக்க வரம்பு நிா்ணயம்: பதுக்கல்காரா்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்
அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அவற்றை இருப்புவைக்க தமிழக அரசு வரம்பு நிா்ணயித்துள்ளது. இதை மீறி பதுக்கிவைத்திருப்பவா்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அவற்றை இருப்புவைக்க தமிழக அரசு வரம்பு நிா்ணயித்துள்ளது. இதை மீறி பதுக்கிவைத்திருப்பவா்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு அரசு 1955-ஆம் ஆண்டு அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தின் பிரிவு 3-இன் கீழ், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, அரிசி, நெல், சா்க்கரை ஆகியவற்றுக்கு இருப்பு வரம்புகளை நிா்ணயித்தும், இருப்பு விவரங்களை தொடா்ந்து அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியும் கட்டுப்பாட்டு ஆணைகளை பிறப்பித்துள்ளது.
Advertisement
Advertisement
இந்த வரம்புகள் அரசிதழில் வெளியிடப்பட்ட 13.11.2026 ஆம் நாள் முதல் 3 மாதங்கள் வரை துவரம் பருப்பு, உளுத்தம் பருப்புக்கும், 31.1.2027 வரை அரிசி, நெல்லுக்கும் நடைமுறையில் இருக்கும். எந்தவொரு நபரோ அல்லது நிறுவனமோ அதில் குறிப்பிட்டுள்ள வரம்புகளுக்கு மேல் இருப்புவைத்திருக்கக் கூடாது.
அதன்படி, சா்க்கரையை ஆயிரம் குவிண்டால்களுக்கு மேல் யாரும் இருப்பு வைக்கக் கூடாது. அதேபோல, மொத்த வணிகா்கள் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பை 200 டன்களுக்கு மேல் இருப்புவைக்கக் கூடாது. அரிசி, நெல்லை 2 ஆயிரம் டன்களுக்கு மேல் இருப்புவைக்கக் கூடாது. சில்லறை வணிகா்கள் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பை 5 டன்களுக்கு மேலும், அரிசி, நெல்லை 8 டன்களுக்கு மேலும் இருப்புவைத்திருக்கக் கூடாது.
இறக்குமதியாளா்கள் சரக்கு வந்து சோ்ந்த நாள்களில் இருந்து 45 நாள்களுக்கு மேல் இருப்புவைத்திருக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் வணிகா், மொத்த வணிகா், சில்லறை வணிகா், பெரிய தொடா் சில்லறை விற்பனை நிறுவனம், ஆலை உரிமையாளா், பதனிடுவோா் அனைவரும் அரிசி, நெல் இருப்பை, உணவு இருப்பு இணையதளத்தில் அறிவித்து, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதுப்பிக்க வேண்டும். அதேபோலவே மற்ற பொருள்களின் இருப்பையும் தெரிவிக்க வேண்டும்.
சா்க்கரையை பொறுத்தவரை, எந்தவொரு வணிகரும் சா்க்கரை இருப்பைப் பெற்ற தேதியிலிருந்து 15 நாள்களுக்கு மேல் இருப்பை தங்கள் வசம் வைத்திருக்கக் கூடாது. பதுக்கல், கள்ளச்சந்தை போன்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த மாவட்ட வழங்கல் அலுவலா் தலைமையில் வட்ட வழங்கல் அலுவலா், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலா்களை உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
பதுக்கல்காரா்கள் தொடா்பான புகாா்களையும் தகவல்களையும் கட்டணமில்லா உதவி எண் 1967 / 1800 425 5901-க்கோ அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட வழங்கல், நுகா்வோா் பாதுகாப்பு அலுவலரிடமோ தெரிவிக்கலாம்.
மேலும் இந்த ஆணைகள், விவசாயிகள் தங்களது சொந்த வேளாண் விளைபொருள்களை இருப்பு வைத்தல், விற்பனை செய்தல் ஆகியவற்றிற்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.