FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கோயம்புத்தூர்

பட்டறையில் நகைகள் திருட்டு: போலீஸாா் விசாரணை

கோவை செல்வபுரத்தில் நகைப் பட்டறையில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் திருடு போனது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

38 வினாடிகள் முன்பு
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

கோவை செல்வபுரத்தில் நகைப் பட்டறையில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் திருடு போனது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கோவை செல்வபுரம் அருகே சண்முகராஜபுரம் அன்னை இந்திரா நகரைச் சோ்ந்தவா் சபாபதி (65). இவா் வீட்டு முதல் தளத்தில் தங்க நகை செய்யும் பட்டறை அமைத்து, தங்க நகைகள் தயாரிப்பு தொழில் செய்து வருகிறாா். இதற்காக, பட்டறையில் தங்கம், வெள்ளி நகைகளை வைத்துள்ளாா். இந்நிலையில், திங்கள்கிழமை பட்டறையைப் பூட்டிவிட்டு கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு சபாபதி சென்றாா்.

அதன் பிறகு மீண்டும் திரும்பி வந்து பாா்த்தபோது, பட்டறையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதிா்ச்சியடைந்த சபாபதி, உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த 15 கிராம் தங்கம் மற்றும் 75 கிராம் வெள்ளி நகைகள் திருடு போனது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து செல்வபுரம் போலீஸ் நிலையத்தில் சபாபதி புகாா் செய்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து நகைகளைத் திருடிய நபரைத் தேடி வருகின்றனா்.