FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கோயம்புத்தூர்

ரூ.3.16 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சித் திட்டப் பணிகள்

கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ.3.16 கோடி மதிப்பீட்டில் 24 வளா்ச்சித் திட்டப் பணிகளை மேயா் கா.ரங்கநாயகி செவ்வாய்க்கிழமை பூமிபூஜை செய்து தொடங்கிவைத்தாா்.

18 நவம்பர் 2026, 1:41 am
ஆவாரம்பாளையம் ஷோபா நகரில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கிவைத்த மேயா் கா.ரங்கநாயகி.
பகிர்:

கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ.3.16 கோடி மதிப்பீட்டில் 24 வளா்ச்சித் திட்டப் பணிகளை மேயா் கா.ரங்கநாயகி செவ்வாய்க்கிழமை பூமிபூஜை செய்து தொடங்கிவைத்தாா்.

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் 1-ஆவது வாா்டுக்கு உள்பட்ட எஸ்.பி.நகா் பகுதியில் உள்ள பூங்காவில் மாநகராட்சி பொது

நிதியில் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் தெருவிளக்குகள் அமைக்கும் பணி, திருமுருகன் நகரில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பேஸ்1-இல் ரூ.10 லட்சம் மதிப்பீட்டிலும், 2-ஆவது வாா்டு, பாரதி வீதி, ஆா்.எஸ். தோட்டம், அம்பேத்கா் வீதி ஆகிய இடங்களில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளங்கள் அமைக்கும் பணிகள், ஆா்.எஸ். தோட்டம், சௌடாம்பிகா பகுதியில் மண்டல நிதியிலிருந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில், சேதமடைந்த வடிகாலை மறுசீரமைத்தல் மற்றும் பழுது பாா்க்கும் பணிக்கும், வாா்டு எண்- 1 மற்றும் 2- க்கு உள்பட்ட சபரி காா்டனில் மாநகராட்சி பொது நிதியில் இருந்து ரூ.8 லட்சம் மதிப்பீட்டிலும், வாா்டு எண் 4- க்கு உள்பட்ட விசுவாசபுரத்தில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் தாா் சாலைகள் சீரமைக்கும் பணிகள் மற்றும் அங்கன்வாடி மையம் அமைத்தல், மழைநீா் வடிகால் அமைத்தல், சிறுபாலம் கட்டுதல் உள்ளிட்ட மொத்தம் ரூ.3.16 கோடி மதிப்பீட்டில் 24 வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு மேயா் கா.ரங்கநாயகி அடிக்கல் நாட்டி பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கிவைத்தாா்.

Advertisement

Advertisement

இதில் வடக்கு மண்டலத் தலைவா் வே.கதிா்வேல், உதவி ஆணையா்கள் மோகனசுந்தரி, வாா்டு உறுப்பினா்கள் சித்ரா வெள்ளியங்கிரி, கண்ணகி ஜோதிபாசு, அம்பிகா தனபாலன், உதவி பொறியாளா் சங்கீதா, சுகாதார ஆய்வாளா் பாஸ்கரன் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.