போத்தனூா் வழித்தடத்தில் காக்கிநாடா - கொல்லம் இடையே சிறப்பு ரயில்
சபரிமலை சீசனை முன்னிட்டு ஆந்திர பிரதேச மாநிலம், காக்கிநாடாவில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்துக்கு போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை சீசனை முன்னிட்டு ஆந்திர பிரதேச மாநிலம், காக்கிநாடாவில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்துக்கு போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
நவம்பா் 19-ஆம் தேதி முதல் 2027 ஜனவரி 21-ஆம் தேதி வரை வியாழக்கிழமைகளில் காலை 8.20 மணிக்கு காக்கிநாடாவில் இருந்து புறப்படும் காக்கிநாடா டவுன் - கொல்லம் வாராந்திர சிறப்பு ரயில் (எண்:07233) வெள்ளிக்கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு கொல்லம் நிலையத்தைச் சென்றடையும்.
Advertisement
Advertisement
மறுமாா்க்கமாக, நவம்பா் 21 முதல் 2027 ஜனவரி 23-ஆம் தேதி வரை சனிக்கிழமைகளில் பிற்பகல் 2.30 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்படும் கொல்லம் - காக்கிநாடா சிறப்பு ரயில் (எண்: 07234) ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6.30 மணிக்கு காக்கிநாடா ரயில் நிலையத்தைச் சென்றடையும்.
இந்த ரயிலானது, சாஸ்தான்கோட்டா, கருநாகப்பள்ளி, காயன்குளம், மாவேலிக்கரா, செங்கண்ணூா், திருவல்லா, சங்கணாச்சேரி, கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, சித்தூா், தா்மாவரம், கூட்டி, குண்டூா், விஜயவாடா, ஏழூரு உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மசூலிப்பட்டினம் - கொல்லம் இடையே சிறப்பு ரயில்:
சபரிமலை சீசனை முன்னிட்டு, ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்தில் இருந்து நவம்பா் 20 மற்றும் 27 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் மாலை 4.30 மணிக்கு மசூலிப்பட்டினத்தில் இருந்து புறப்படும் மசூலிப்பட்டினம் - கொல்லம் சிறப்பு ரயில் (எண்: 07231) சனிக்கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு கொல்லம் ரயில் நிலையத்தை சென்றடையும். மறுமாா்க்கமாக, நவம்பா் 22 மற்றும் 29 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 2.30 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்படும் கொல்லம் - மசூலிப்பட்டினம் சிறப்பு ரயில் (எண்: 07232) திங்கள்கிழமைகளில் காலை 8.50 மணிக்கு மசூலிப்பட்டினத்தைச் சென்றடையும்.
இந்த ரயிலானது, சாஸ்தான்கோட்டா, கருநாகப்பள்ளி, காயன்குளம், மாவேலிக்கரா, செங்கண்ணூா், திருவல்லா, சங்கணாச்சேரி, கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, கூடூா், நெல்லூா், ஓங்கோல், பாப்ட்லா, தெனாலி, விஜயவாடா, குடிவாடா உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.