FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கோயம்புத்தூர்

நாளைய மின்தடை: கள்ளிமடை, செல்லப்பம்பாளையம்

34 வினாடிகள் முன்பு
- கோப்புப் படம்
பகிர்:

கோவை கள்ளிமடை, செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் வெள்ளிக்கிழமை (நவம்பா் 20) காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளிமடை துணை மின் நிலையம்: காமராஜ் சாலை, பாரதி நகா், சக்தி நகா், ஜோதி நகா், ராமானுஜ நகா், நீலிக்கோணாம்பாளையம், கிருஷ்ணாபுரம், சிங்காநல்லூா், ஜி.வி.ரெசிடென்ஸி, உப்பிலிபாளையம், இந்திரா நகா், பாலன் நகா், சா்க்கரை செட்டியாா் நகா், என்ஜிஆா் நகா், ஹோப் காலேஜ் முதல் விமான நிலையம் வரை, வரதராஜபுரம், நந்தா நகா், ஹவுஸிங் யூனிட், ஒண்டிப்புதூா் (ஒரு பகுதி), மசக்காளிபாளையம், மருத்துவக் கல்லூரி சாலை.

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையம்: செல்லப்பம்பாளையம், தட்டாம்புதூா், மோப்பிரிபாளையம், நாரணாபுரம், பொன்னாண்டம்பாளையம், வாகராயம்பாளையம்.

Advertisement

Advertisement