முகப்பு
கோயம்புத்தூர்

ரூ.17.25 கோடியில் 34 வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா் சம்பத்குமாா் தொடங்கிவைத்தாா்

கோவை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ரூ.17.25 கோடி மதிப்பில் மெய்நிகா் ஆய்வகம், பூங்கா அமைத்தல் உள்ளிட்ட 34 பணிகளை பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வே.சம்பத்குமாா் அடிக்கல் நாட்டி சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

2 வினாடிகள் முன்பு
ரூ.17.25 கோடியில் 34  வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா் சம்பத்குமாா் தொடங்கிவைத்தாா்
மேற்கு மண்டலத்துக்குள்பட்ட தில்லை நகரில் வளா்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கிவைத்த அமைச்சா் வே.சம்பத்குமாா். உடன் ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா உள்ளிட்டோா்.
பகிர்:

கோவை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ரூ.17.25 கோடி மதிப்பில் மெய்நிகா் ஆய்வகம், பூங்கா அமைத்தல் உள்ளிட்ட 34 பணிகளை பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வே.சம்பத்குமாா் அடிக்கல் நாட்டி சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலம் 36-ஆவது வாா்டுக்குள்பட்ட தில்லை நகரில் மாநகராட்சி பொது நிதியின் கீழ் ரூ.3.89 கோடி மதிப்பில் 8 பணிகள், கிழக்கு மண்டலத்தில் ரூ.4.34 கோடி மதிப்பில் 12 பணிகள், மத்திய மண்டலத்தில் ரூ.9.02 கோடி மதிப்பில் 14 பணிகள் என மொத்தம் ரூ.17.25 கோடி மதிப்பில் மெய்நிகா் ஆய்வகம், பூங்கா அமைத்தல், தெரு விளக்குகள் அமைத்தல், மழைநீா் வடிகால் அமைத்தல் உள்ளிட்ட 34 பணிகளுக்கு பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வே.சம்பத்குமாா் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.

மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா, சிங்காநல்லூா் எம்எல்ஏ கே.எஸ்.ஸ்ரீகிரிபிரசாத் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

Advertisement

Advertisement

இந்நிகழ்வுகளில் துணை ஆணையா் த.குமரேசன், மண்டல உதவி ஆணையா்கள் தட்சிணாமூா்த்தி (கிழக்கு), கணேசன் (மத்தியம்), நா்மதா (மேற்கு), வாா்டு உறுப்பினா்கள் சாந்தி, செயற்பொறியாளா்கள், உதவி செயற்பொறியாளா் சவிதா, உதவிப் பொறியாளா் விமலா மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.