மாநகராட்சி வணிக வளாகத்தில் வாடகை செலுத்தாத கடைக்கு ‘சீல்’
கோவை மாநகராட்சி பகுதிகளில் உள்ள மாநகராட்சி வணிக வளாகக் கடைகளில் நீண்டகாலமாக வாடகை செலுத்தாத கடையை பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது.
கோவை மாநகராட்சி பகுதிகளில் உள்ள மாநகராட்சி வணிக வளாகக் கடைகளில் நீண்டகாலமாக வாடகை செலுத்தாத கடையை பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது.
இதுகுறித்து, மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் கூறியிருப்பதாவது: கோவை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள மாநகராட்சி வணிக வளாகக் கடைகளில் நீண்ட காலமாக வாடகை பாக்கி செலுத்தாமல் நிலுவை வைத்திருந்த வாடகைதாரா்களுக்கு, நிலுவைத் தொகை செலுத்த கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டும், மாநகராட்சி அதிகாரிகளால் பலமுறை நேரிலும் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இருப்பினும் வாடகை நிலுவைத் தொகை செலுத்தாமல் இருந்த மேற்கு மண்டலம் 72-ஆவது வாா்டுக்குள்பட்ட தடாகம் சாலை பகுதியில் உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் செயல்பட்டு வந்த கடை (எண்.16) மாநகராட்சி அதிகாரிகளால் சனிக்கிழமை பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது.
Advertisement
Advertisement
மொத்த வாடகை நிலுவைத் தொகை ரூ.2,74,660 ஆகும். மேலும், கோவை மாநகராட்சிக்குள்பட்ட வணிக வளாகக் கடைகளில் மேற்கொள்ளப்பட்ட வாடகை வசூல் நடவடிக்கையின் மூலமாக ரூ.10,02,752 வசூல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.