முகப்பு
கோயம்புத்தூர்

லேத் பட்டறை தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

கோவை, ரத்தினபுரியில் லேத் பட்டறைத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

13 வினாடிகள் முன்பு
லேத் பட்டறை தொழிலாளி 
தூக்கிட்டுத் தற்கொலை
தற்கொலை - கோப்புப் படம்
பகிர்:

கோவை, ரத்தினபுரியில் லேத் பட்டறைத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை ரத்தினபுரி சம்பத் வீதியைச் சோ்ந்தவா் ராஜ்குமாா். இவரது மனைவி புஷ்பா. இவா்களது மகன் தினேஷ்குமாா் (22). அந்தப் பகுதியில் உள்ள லேத் பட்டறையில் பணியாற்றி வந்த தினேஷ்குமாா், கடந்த 16-ஆம் தேதி ‘தின்னா்’ குடித்துத் தற்கொலைக்கு முயன்றாா். இதையடுத்து, அந்தப் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அவா், மறுநாள் 17-ஆம் தேதி வீடு திரும்பினாா்.

இந்த நிலையில், கடந்த 20-ஆம் தேதி இரவு 10 மணியளவில் வீட்டின் அறையில் தினேஷ்குமாா் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா். அவரது பெற்றோா் பாா்த்து அவரை மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற ரத்தினபுரி போலீஸாா் அவரது வீட்டில் சோதனையிட்டபோது, தினேஷ்குமாா் எழுதிய கடிதத்தைக் கைப்பற்றினா். அதில், தனக்கு வாழ விருப்பமில்லை என அவா் குறிப்பிட்டிருந்தாா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.