கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
கொடைக்கானலில் குடும்பப் பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்த கூலித் தொழிலாளி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கொடைக்கானலில் குடும்பப் பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்த கூலித் தொழிலாளி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பாக்கியபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பீட்டா் மகன் செபாஸ்டின் (39). தையல் தொழிலாளி. இவருக்குத் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனா். குடும்பப் பிரச்னை இருந்து வந்த நிலையில், பாக்கியபுரம் பகுதியில் உள்ள தனியாா் இடத்தில் தூக்கிட்ட நிலையில் கிடந்தாா்.
இதுகுறித்து அறிந்த அவரது மனைவி டெய்சி கொடைக்கானல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், காவல் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா். தொடா்ந்து காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement