கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
சிங்கம்புணரி அருகே கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
எஸ். புதூா் ஒன்றியம், முசுண்டபட்டி, வேலம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் மகன் தங்கவேல் (38). இவா் மனைவி மகளுடன் கோவையில் தங்கி கட்டட வேலை செய்து வந்தாா்.
தீபாவளிக்கு சொந்த ஊரான முசுண்டபட்டிக்கு வந்த தங்கவேல் கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட குடும்பப் பிரச்னை காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து புழுதிபட்டி போலீஸாா் விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement